உலகம்

தென் பகுதிகளில் அதிகரிக்கும் கரோனா தொற்று: ஈரான் கவலை

செய்திப்பிரிவு

ஈரானில் கடந்த 24 மணிநேரத்தில் 1,529 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரானின் அனைத்து மாகாணங்களிலும் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், தென் பகுதிகளில் மட்டும் கரோனா தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில், “ஈரானின் அனைத்து மாகாணங்களிலும் கரோனா தொற்று குறைந்து வருகிறது. ஆனால் தென்பகுதியில் உள்ள குசெஸ்தான் போன்ற் பகுதிகளில் கரோனா தொற்று தீவிரமாக உள்ளது. தொடர்ந்து தென்பகுதி மாகாணங்கள் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் 1,06,220 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,589 பேர் பலியாகியுள்ளனர். 85,064 பேர் குணமடைந்துள்ளனர்.

மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனா தொற்றால் ஈரான் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஈரானில் பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கிய கரோனா மார்ச் மாதம் தீவிரத்தை அடைந்தது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் கரோனா தொற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் 40,14,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,76,237 பேர் பலியாகியுள்ளனர். 13,87,181 பேர் குணமடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT