மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டால் மனித குலம் அழிந்து விடும் என்று ரஷ்ய நாடாளுமன்ற சபாநாயகர் செர்ஜி நாரிஷின் எச்சரித்துள்ளார்.
ரஷ்ய நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப் பதாவது:
முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போரால் மனித குலம் பேரழிவைச் சந்தித்தது. மூன்றாம் உலகப் போர் மூண்டால் மனித குலம் முற்றிலுமாக அழிந்துவிடும்.
ரஷ்யா தனது படை பலத்தை அதிகரித்து வருவது உண்மை தான். ஆனால் உள்நாட்டுப் பாது காப்புக்காகவே எங்களது ராணுவத்தை வலுப்படுத்துகி றோம். ஒவ்வொரு நாட்டு மக்களும் அவரவர் விதியை அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்பதே ரஷ்யாவின் கொள்கை. அந்நிய நாடுகள் தலையிடுவதை ரஷ்யா ஏற்கவில்லை.
உக்ரைன் விவகாரத்தில் கிரிமியா பகுதி மக்கள் அவர்களின் விருப்பத்தின்பேரிலேயே ரஷ்யா வுடன் இணைந்தனர். இந்த விவகா ரத்தில் சர்வதேச நாடுகளின் நிர்பந்தத்துக்கு அடிபணிய மாட்டோம்.
ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் ரஷ்யா மீது பல்வேறு பொருளா தார தடைகள் விதிக்கப்பட்டுள் ளன. ஆனால் தனிப்பட்ட முறையில் ஐரோப்பிய நாடுகளிடம் கருத்துக் கணிப்பு நடத்தினால் ரஷ்யாவை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அமெரிக்காவின் வற்புறுத்தல் காரணமாகவே ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படுகின்றன.
ஆனால் எதையும் எதிர்கொள் ளும் திறன் ரஷ்யாவுக்கு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.