உலகம்

கரோனா வைரஸ் முதன்முதலில் பரவிய ஹுபே மாகாணத்தில் 30 நாட்களாக தொற்று இல்லை

செய்திப்பிரிவு

கரோன வைரஸ் முதன்முதலில் பரவத் தொடங்கிய ஹூபே மாகாணத்தில் 30 நாட்களாக எந்த நோய்த் தொற்றும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “ஹூபே மாகாணத்தில் 30 நாட்களாக கரோனா தொற்று ஏதும் ஏற்படவில்லை. எனினும் இன்னும் 677 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு சுமார் 83,959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,637 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் கரோனா வைரஸ் எவ்வாறு பரவியது என்பது தொடர்பான விவரங்களை அமெரிக்கா ஆரம்பம் முதலே கேட்டு வருகிறது. சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் கரோனா வைரஸ் வெளியேறி இருக்கக்கூடும் என்று ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் கரோனா தொற்று ஏற்பட்ட வூஹான் மாகாணத்தில் தற்போது நோய்த் தொற்று முழுமையாக நீங்கியுள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

உலகம் முழுவதும் 35,66,469 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 11,54,549 பேர் குணமடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT