கரோனா வைரஸிலிருந்து போரிஸ் ஜான்ஸன் உயிரை காப்பாற்றிய இரு டாக்டர்களின் பெயரையும் தங்களின் குழந்தைக்கு சூட்டி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் , அவரின் வருங்கால மனைவியும் மறக்க முடியாத மரியாதை செய்துள்ளனர்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன், அவரின் வருங்கால மனைவி கேரி சிம்மன்ஸுக்கும் கடந்த புதன்கிழமை ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு லாரி நிகோலஸ் ஜான்ஸன் எனப் பெயர் சூட்டினர். இதி்ல் நிகோலஸ் என்ற பெயர் ஜான்ஸனுக்கு கரோனா வைரஸ் சிகிச்சையளித்து உயிர் காத்த இரு மருத்துவர்கள் பெயராகும். லாரி ஜான்ஸன் எனும் பெயர் போரிஸ், சிம்மன்ஸ் ஆகியோரன் முன்னோர்கள் பெயராகும்.
இந்த தகவலை போரிஸ் ஜான்ஸனின் வருங்கால மனைவி கேரி சிம்மன்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்ட கருத்தில், “ எனக்கும், ஜான்ஸனுக்கும் ஆண் குழந்தை புதன்கிழமை பிறந்தது. அந்த குழந்தைக்கு எனது முன்னோர் பெயரான லாரி, ஜான்ஸனின் முன்னோர் பெயரான ஜான்ஸன் ஆகிய பெயரோடு, கரோனா வைரஸிலிருந்து போரிஸின் உயிர் காத்த இரு மருத்துவர்களான நிக் பிரைஸ், நிக் ஹார்ட் ஆகிய இருவரின் பெயரையும் சேர்க்கு நிகோலஸ் என்றும் வைத்துள்ளேன்
எனது குழந்தை லாரி நிகோலஸ் ஜான்ஸன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. எனக்கு மகப்பேறு மருத்துவம் பார்த்த என்ஹெச்எஸ் மருத்துவமனை குழுவினர் அனைவருக்கும் ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன். எனது இதயம் நிறைந்திருக்கிறது” எனத் தெரிவித்தார்
கரோனா வைரஸால் உலகத் தலைவர்களில் முதன்முதலில் பாதிக்கப்பட்டது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன்(வயது55). தொடக்கத்தில் வீ்ட்டில் தன்னை தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்த ஜான்ஸன் உடல்நிலை மிகவும் மோசமானதையடுத்து அவர் லண்டனில் உள்ள புனித தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு இரு நாட்களுக்குப்பின் இயல்புநிலைக்கு திரும்பினார்.10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சைப் பெற்று குணமடைந்தநிலையில் கடந்த திங்கள்கிழமை முதல் பணிக்குத் திரும்பியுள்ளார்
போரிஸ் ஜான்ஸனும், சிமன்ஸும் கடந்த ஆண்டு தாங்கள் திருமணம் செய்யப்போவதாகத் தெரிவித்திருந்தனர். ஜான்ஸனுக்கும், சிம்மனுக்கும் இடையே 23 வயது வித்தியாசம் இருக்கிறது. இன்னும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
போரி்ஸ், சிம்மன்ஸ் குழந்தை குறைந்த நாட்களில் பிறந்துள்ளதால் அந்த குழந்தையின் எடை, பிறந்தநேரம், பிறந்த இடம் ஆகியவற்றை அதிகாரப்பூர்வமாக பிரதமர் அலுவலகம் வெளியிட மறுத்துவிட்டது.
போரிஸ், சிம்மன்ஸ் தம்பதிக்கு குழந்தை பிறந்த செய்தி கேட்ட ராணி எலிசபெத் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும், கட்சி வேறுபாடின்றி அனைத்து தலைவர்களும் போரிஸ்,சிம்மன்ஸுக்கு வாழ்த்துத் தெரிவி்த்து வருகின்றனர்.