பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவு அதிகபட்சமாக 1,297 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 18,114 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதார அமைச்சகம் தரப்பில், “பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக ஒரே நாளில் 1,297 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 18,114 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 32 பேர் பலியானதைத் தொடர்ந்து கரோனா தொற்றுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 417 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4,000க்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை பாகிஸ்தானில் 1,93,859 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் குணடமடைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கரோனா தொற்று பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள் கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும் பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும், இங்கு கரோனா வைரஸ் தொற்று மே மாத இறுதி மற்றும் ஜூன் மாதத் தொடக்கத்தில் அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கரோனா தொற்றில் 75% சமூகப் பரவல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு 75% கரோனா தொற்று அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.