உலகம்

ரஷ்யாவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 9,000க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று

செய்திப்பிரிவு

ரஷ்யாவில் அதிகபட்சமாக இன்று ஒருநாள் மட்டும் 9,623 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், ''ரஷ்யாவில் இன்று (சனிக்கிழமை) மட்டும் 9,623 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவில் ஒரேநாளில் அதிகபட்சமாக ஏற்பட்ட தொற்று எண்ணிக்கை இதுவாகும். ரஷ்யாவில் கரோனா வைரஸால் 1,24,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,169 பேர் பலியாகியுள்ளனர். 13,220 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கரோனா வைரஸைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அதிபர் புதின் எடுத்து வருகிறார். ரஷ்யா தற்போது ஊரடங்கின் ஐந்தாவது வாரத்தில் உள்ளது. கரோனா வைரஸ் காரணமாக எண்ணெய் மதிப்பு சரிந்துள்ள நிலையில் ரஷ்யா கடும் பொருளாதாரா நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா தொற்றை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கரோனா தொற்றால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் 34,01,231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,39,604 பேர் பலியாகியுள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT