யுகேவில் கரோனா வைரஸால் பலியானவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்தை கடந்துள்ளது.
சீனாவிலிருந்து பரவிய கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது. அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி,பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கரோனா தொற்றுக்கு யுகேவில் பலியானவர்கள் எண்ணிக்கை 27, 583 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “கரோனா தொற்றுஎண்ணிக்கை 27,583 ஆக அதிகரித்துள்ளது. யுகேவில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம்வரை பரிசோதனைகள் செய்வதை இலக்காக கொண்டிருக்கிறோம். கடந்த 24 மணி நேரத்தில் 1,22,347 பேருக்கு கரோனா வைரஸுக்கான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன” என்று தெரிவித்துள்ளனர்.
யுகேவில் கரோனா தொற்றுக்கு 1,77,454 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக யுகே சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் மக்களை சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
யுகேவில் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
உலக முழுவதும் கரோனா வைரஸுக்கு 34, 01,231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,39,604 பேர் பலியாகி உள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்து உள்ளனர்.