டேவிட் ஜெப்பன் 
உலகம்

உல்லாச படகில் இருக்கும் படத்தை வெளியிட்ட அமெரிக்க கோடீஸ்வரர் டேவிட்டுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு- ட்விட்டர் கணக்கையே நீக்கிவிட்டார்

செய்திப்பிரிவு

அமெரிக்காவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரும் ஊடக அதிபருமான டேவிட் ஜெப்பன் உல்லாசப் படகில் தன்னைத்தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதை படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார்.

கரோனா வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கில் இறந்து கொண்டிருக்கின்றனர். ஒருவேளை உணவுக்காக பல நாடுகளில் லட்சக் கணக்கான மக்கள் வரிசையில் நிற்கின்றனர்.

ஆனால், கோடிகளில் புரளும் பணக்காரர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இப்படி உல்லாசபடகில் மது அருந்திக் கொண்டும்சகல வசதிகளுடனும் இருக்கின்றனர் என்று சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கரீபியன் கடலில் கிரீனேடைன்ஸ்பகுதி உள்ளது. இங்கு குட்டிக் குட்டித் தீவுகள் ஏராளமாக உள்ளன.அந்தத் தீவுப் பகுதியில்தான் உல்லாச படகில் தனிமையாக இருக்கிறார் டேவிட் ஜெப்பன். தற்போது கரோனாவால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தன்னிடம் இருக்கும் செல்வ செழிப்பை வெளிப்படுத்தும் விதமாக அவருடைய செயல் இருக்கிறது. மேலும், உலகில் ஏழை - பணக்காரர் வித்தியாசம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை வெளிச்சமிட்டு காட்டுவதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

விமர்சனங்களும் எதிர்ப்புகளும் பெரிதான நிலையில், தன்னுடைய ட்விட்டர் கணக்கையே நீக்கிவிட்டார் டேவிட் ஜெப்பன்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT