உலகம்

வீட்டின் முன் கதவுப்பக்கம், சில வேளைகளில் வீட்டினுள்ளேயும் முன் அனுமதியின்றி கேமராக்கள்: சீன அதிரடி கண்காணிப்பில்  மக்களிடம் வேதனை கலந்த அதிர்ச்சி

செய்திப்பிரிவு

பொதுவாகவே மக்களைக் கண்காணிக்கும் இடதுசாரி எதேச்சதிகாரம் நோய் உள்ளிட்ட பெருந்தீங்கு வரும் போது தன்னுடைய அதிகார பலத்தை மேலும் விஸ்தரிக்கும் என்பதையே வரலாற்றில் மக்கள் அனுபவம் கண்டது.

அந்த வகையில் சீன கம்யூனிஸ்ட் அரசாங்கம் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகே தன் கண்காணிப்புகளை மிகவும் அராஜகமாக செய்து வருவதாக அமெரிக்க ஊடகமான சிஎன்என் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

வீட்டின் முன் கதவுக்கருகில் கேமரா, அல்லது வீட்டினுள்ளேயும் சில வேளைகளில் கேமராக்கள் என்று கண்காணிப்பில் அந்தரங்க உரிமைகளை மிகக்கேவலமாக சீனா பறிப்பதாக சிஎன்என் செய்தி அறிக்கை கூறுகிறது.

இது தொடர்பாக சிஎன்என் செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இயன் லாஹிஃப் என்பவரின் குடும்பம் சமீபமாக தெற்கு சீனாவிலிருந்து பெய்ஜிங்குக்குத் திரும்பியுள்ளனர். வந்தவுடன் இவருக்கு காத்திருந்த அதிர்ச்சி இவர் வீட்டின் முன் கதவுக்கு அருகே கேமரா பொறுத்தப்பட்டிருப்பதைக் கண்டார். இவர் வீட்டின் கதவைத் திறந்தவுடன் கேமரா இருப்பது கண்டு அதிர்ந்தார்.

சீனாவில் இப்போதைக்கு எந்த ஊருக்குச் சென்று வந்தாலும் 14 நாட்கள் தனிமையில் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

லாஹிஃப் கூறும்போது, “இது மிகப்பெரிய அளவிலான அந்தரங்க உரிமையை மீறலாகும். மிகப்பெரிய தரவு சேகரிப்பாகும். இது எவ்வளவு சட்டபூர்வமானது என்று தெரியவில்லை.” என்றார்

தனிமையில் இருக்கும் குடும்பத்தினர் வீட்டில் கேமராக்கள் வைக்கப்படும் என்று எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. ஆனால் கடந்த பிப்ரவரியிலிருந்து சீனா பல நகரங்களில் இதனைக் கடைப்பிடித்து வருகிறது, இது குறித்து சீன அரசு சட்டமும் இயற்றவில்லை, அறிவிப்பும் இல்லை ,ஆனால் சீன மக்களின் வாழ்க்கையில் இப்போது இது பழகிய ஒன்றாகி விட்டது.

மக்கள் தெருக்களைக் கடக்கும் போதும், ஷாப்பிங் மாலில் நுழையும் போதும் உணவகங்களில் சாப்பிடும் போதும் பஸ்சில் ஏறும் போதும் பள்ளியில் வகுப்பறையில் இருக்கும் போதும் கண்காணிக்கப்படுகின்றனர். 2017 புள்ளி விவரங்களின் படியே 2 கோடி கேமராக்கள் சீன நகரங்களில் ஆங்காங்கே நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஐஎச்எஸ் மார்கிட் டெக்னாலஜி ஆனால் 349 மில்லியன் கண்காணிப்புக் காமராக்களை சீனா நிர்மாணித்துள்ளது, இது 2018 கணக்கு. அமெரிக்காவை விடவும் 5 மடங்கு அதிக கண்காணிப்புக் கேமராக்கள் சீனாவில் உள்ளன.

உலகிலேயே 10 நகரங்கள் கண்காணிப்புக் கேமராக்களின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறது என்றால் சீனாவில் மட்டும் அதில் 8 நகரங்கள் உள்ளதாக பிரிட்டன் ஆய்வு ஒன்று கூறுகிறது.

ஆனால் கரோனாவுக்குப் பிறகு கேமராக்கள் தெருக்களிலிருந்து தற்போது வீட்டுக்குள்ளும் புகுந்துள்ளது. சில வேளைகளில் குடியிருப்பின் உள்ளேயும் கேமராக்கள் வைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக சிஎன்என் ஊடகம் சீன சுகாதார அதிகாரிகள், பொதுப்பாதுகாப்பு அமைச்சகத்துக்கு கேள்வி கேட்டு அனுப்பியதற்கு எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை.

ஏன் வீட்டில் கேமராக்கள் என்றால், இது கதவு திறக்கப்படும்போது, கதவில் இயக்கம் இருக்கும் போது ஸ்டில் போட்டோக்களை மட்டும் எடுக்கும் வேறு எதையும் இது படம் பிடிக்காது என்று ஒரு மாகாணத்தைச் சேர்ந்தவர் கேள்வி எழுப்பும்போது போலீஸார் பதில் அளித்துள்ளனர்.

இதனால் வீட்டுக்குள்ளேயே கைதிகளாக்கப்படுவதாக சீன மக்கள் வேதனையும் கோபமும் அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT