அதிபர் ட்ரம்ப்: கோப்புப்படம் 
உலகம்

கரோனா விவகாரத்தில் சீனா செய்தது எதுவும் சரியில்லை, மகிழ்ச்சியும் இல்லை: விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம்: அதிபர் ட்ரம்ப் ஆவேசம் 

பிடிஐ

கரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா செய்த செயல் எதுவும் எங்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. சீனாவுக்கு எதிரான விசாரணயைத் தீவிரப்படுத்தியுள்ளோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவில் ஏற்படுத்திய பாதிப்பைக் காட்டிலும் அமெரிக்காவில் மோசமான பாதிப்பை கோவிட்-19 வைரஸ் ஏற்படுத்தி வருகிறது.

இதுவரை அங்கு 56 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனியிலும் கரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இதுவரை சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஈரமான விலங்குகள் சந்தையில் வௌவால்களிடம் இருந்துதான் பரவியதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் புகழ்பெற்ற நாளேடான தி வாஷிங்டன் போஸ்ட், தி ஃபாக்ஸ் நியூஸ் சேனல் ஆகியவை ரகசியமாகச் சேகரித்த செய்திகளின் அடிப்படையில் சார்ஸ்-கோவிட்-19 வைரஸ் வௌவால்களிடம் இருந்து பரவவில்லை.

அது சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் சீன அரசின் ஆய்வகங்களிலிருந்து கவனக்குறைவாகக் கையாண்டதால் பரவியுள்ளது எனச் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த செய்தி வெளியானதிலிருந்து அதிபர் ட்ரம்ப் அதிருப்தியான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். அமெரிக்கா மட்டுமல்லமல் ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளும் கரோனா விவகாரத்தில் சீன அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடந்திருந்தால் உலகளவில் இதுபோன்ற உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது, பொருளாதார பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று குற்றம்சாட்டி வருகின்றன. சீனாவிடம் இருந்து இழப்பீடு கோருவதற்கு பல நாடுகள் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள ரோஸ் கார்டனில் நேற்று அதிபர் ட்ர்ப் நிருபர்களுக்குப் பேட்டி அளி்த்தார். அப்போது அவர்ிடம் ஜெர்மன் நாடு 13000 கோடி யூரோக்களை இழப்பீடு கோர தயாராகி வருகிறது. அமெரிக்கா என்ன செய்யப்போகிறது என்று கேட்டனர். அதற்கு ட்ரம்ப் கூறியதாவது:

நாங்களும் சீனாவிடம் இருந்து இழப்பீடு கோரப் போகிறோம் ஆனால், ஜெர்மனி போன்று குறைந்த தொகை இருக்காது. இன்னமும் இழப்பீடு தொகைகுறித்து முடிவு செய்யவில்லை, நிச்சயம் அதிகமாகத்தான இருக்கும்.உலகளவில் பாருங்கள் எவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டிருக்கிறது.

மனித உயிரிழப்புகள், பொருளாதார இழப்புகள் நடந்துள்ளன. அமெரிக்காவுக்கு மட்டும் ஏற்்பட்ட பாதிப்பில்லை உலகத்துக்கே ஏற்பட்ட பெரும் பாதிப்பு.

கரோனா வைரஸ் உலகளவில் பரவியதற்கு சீனாதான் பொறுப்பு என பலவழிகளில் பொறுப்பை சுமத்தமுடியும். இதுதொடர்பாக தீவிரமான விசாரணை நடத்தி வருகிறோம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.சீனாவின் செயல்பாடுகள் எதுவும் சரியில்லை எங்களுக்கு மகிழ்ச்சியும் இல்லை.

ஒட்டுமொத்த சூழலிலும் எங்களுக்கு மகிழ்ச்சியில்லை, ஏனென்றால் இந்த பாதிப்பை சீனா தொடக்கத்திலேயே தடுத்திருக்க முடியும் உலகளவில் பரவவி்ட்டிருப்பதை தடுத்திருக்கலாம். சீனா அவ்வாறு எச்சரித்திருந்தால் இது நடந்திருக்கும். ஆதலால் சரியான நேரத்தில் எங்கள் விசாரணையின் முழுமையான விவரங்களை அறிவீர்கள்.

இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவி்த்தார்

SCROLL FOR NEXT