எங்கு கடந்த டிசம்பர் மாதம் கரோனா வைரஸ் தொடங்கி உலகை இன்று சீரழித்து வருகிறதோ அந்த சீனாவின் வூஹான் நகரம் இன்று கரோனா இல்லாத நகரமாகிவிட்டது. புதிய தொற்றுக்கள் இல்லை, அனைத்து கரோனா நோயாளிகளும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக சீனா பெருமிதம் அடைந்துள்ளது.
மேலும் வூஹான் நிர்வாகம், மருத்துவப் பணியாளர்களின் இணைந்த உழைப்புக்காக பாராட்டையும் தெரிவித்துள்ளது சீன அரசு.
“ஏப்ரல் 26ம் தேதியான இன்று சமீபத்திய நிலவரம் என்னவெனில் வூஹானில் கரோனா புதிய தொற்று பூஜ்ஜியம். நாடு முழுதும் உள்ள மருத்துவப் பணியாளரின் ஒருங்கிணைந்த பணிகளுக்கு நன்றி” என்று சீனா சுகாதார கமிஷன் செய்தித் தொடர்பாளர் மீ ஃபெங் தெரிவித்தார்.
வூஹானில் 46,452 கரோனா கேஸ்கள் இருந்தன, 3869 பேர் இங்கு மட்டும் பலியாகியுள்ளனர்.
சீனாவின் பலி எண்ணிக்கையில் 84% வூஹானில் என்பது குறிப்பிடத்தக்கது.