உலகம்

ஹெ1பி விசாவை ரத்து செய்ய அமெரிக்கா திட்டம்

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்கர்கள் வேலையிழப்பைச் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் பிற நாட்டினர் வேலை செய்வதற்கு வழங்கப்பட்டு வரும் ஹெ1பி விசா உள்ளிட்ட பிற வேலைத்திட்டங்களை ரத்து செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. .

அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும்வகையில் வெளிநாட்டினர்களுக்கான வேலை வாய்ப்பு விசாக்களை ரத்து செய்வது தொடர்பான செயல்திட்டங்களை அடுத்த 30 நாட்களுக்கு உருவாக்க வேண்டும் என்று நேற்று முன் தினம் அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார். தவிர, அடுத்த 60 நாட்களுக்கு வெளிநாட்டினர் யாருக்கும் நிரந்த குடியுரிமை வழங்கப்படக்கூடாது என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஹெச்-1பி விசாவை ரத்து செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக டிரம்ப்புக்கு காங்கிரஸ் உறுப்பினர் பால் ஹோசர் எழுதிய கடிதத்தில், ‘ கரோனா வைரஸ் காரணமாக தொழில்கள் முடங்கியுள்ள நிலையில் 2.6 கோடி அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர். அவர்களுக்கு நாம் வேலைகளை ஏற்படுத்தித் தர வேண்டும். எனவே அமெரிக்காவில் பிற நாட்டினர்கள் வேலை செய்வதற்கு வழங்கப்படும் ஹெச்-1பி, ஹெச் 4, எல் 1, பி 1, பி 2 விசாக்களை ரத்து செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயத்தில் ஹெச்-1பி விசாவில் இருக்கும் வெளிநாட்டு மருத்துவ பணியார்களின் வேலைகளுக்கு பாதுக்காப்பு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினட் ஜோஸ் ஹார்டர் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது மருத்துவர்கள் பணி அத்தியாவசியமானது. சில மருந்துமனைகளில் நிதிச் சிக்கல் காரணமாக வெளிநாட்டு மருத்துவர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றன. அந்த மருத்துவரகளுக்கு உரிய பாதுக்காப்பு வழங்கப்பட வேண்டியது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் இந்தியர்கள் குறிப்பிடத்தக்க அளவில் பணிபுரின்றனர். இந்நிலையில் அவர்கள் வேலை பறிபோவதற்கான வாய்புகள் அதிகமாக இருக்கிறது.

SCROLL FOR NEXT