உலகம்

பாகிஸ்தானில் கரோனா தொற்று 10, 513 ஆக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 10, 513 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 742 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானி கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10, 513 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 15 பேர் நேற்று மட்டும் உயிரிழந்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் அதிகப்பட்சமாக பஞ்சாப் மாகாணத்தில் 4,590 பேரும், சிந்து மாகாணத்தில் 3,373 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானின் நிலைமை கரோனா தொற்று காரணமாக மேலும் மோசமடைந்துள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

உலகம் முழுவதும் கரோனா தொற்றுக்கு 26, 39,025 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,84,263 பேர் பலியாகி உள்ளனர். 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் குணமடைந்து மீண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT