பிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றுக்கு 531 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து பிரான்ஸில் கரோனா தொற்றுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 20,796 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சினுவா வெளியிட்ட செய்தியில், “ பிரான்ஸில் கரோனா வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் 531 பேர் பலியாகியுள்ளனர். இதன் காரணமாக பிரான்ஸில் கரோனா பலி எண்ணிக்கை 20,796 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நோய்த்தொற்று மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்கள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் கரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துக் கடுமையாகப் போராட வேண்டியுள்ளது என்று பிரான்ஸ் சுகாதார இயக்குனர் சாலமன் தெரிவித்துள்ளார்.
மே 11 ஆம் தேதிக்குப் பிறகு பிரான்ஸில் ஊரடங்கு உத்தரவு படிப்படியாகக் குறையும் என்று அதிபர் மேக்ரோன் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
25, 57,504 பேர் கரோனா தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 6, 94,881 பேர் குணமடைந்துள்ளனர்.