ஊழல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கிலானியை கைது செய்ய கராச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.
வர்த்தக மேம்பாட்டு ஆணையம் சார்பில் பல்வேறு போலி நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் மானியத் தொகையை அனுமதித்ததாக பாகிஸ்தான் மக்கள் கட்சி மூத்த தலைவர்கள் கிலானி, மெக்தூம் அமீன் பாஹிம் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இருவர் மீதும் 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் நேரில் ஆஜராகுமாறு இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இருவரும் ஆஜராகவில்லை. இதையடுத்து கிலானியையும் பாஹிமையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கராச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.