கரோனா வைரஸுக்கு எதிரானப் போரில் இந்தியா தன்னால் முடிந்த உதவிகளை மற்ற நாடுகளுக்குச் செய்து வருவதற்கு சல்யூட் செய்கிறோம் என்று ஐ.நா. சபை பாராட்டியுள்ளது.
கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்தாக மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளை வழங்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த மாதம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைக்குப் பின், இந்த மாத்திரைகளின் ஏற்றுமதியை மத்திய அரசு கடந்த மாதம் 25-ம் தேதி தடை செய்ததது.
ஆனால், உலக நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஏற்றுமதிக்கான தடையை விலக்கிய மத்திய அரசு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை அமெரிக்கா, பிரேசில், இத்தாலி, இலங்கை, நேபாளம், ஜமியா, டோமினிக் குடியசு, மடகாஸ்கர்,உகாண்டா, புர்கினபாஸோ, நைஜர், மாலி,காங்கோ, எகிப்து, அர்மேனியா, கஜகஸ்தான், ஈக்வெடார், ஜமைக்கா, சிரியா, உக்ரைன், சாட், ஜிம்பாப்பே, பிரான்ஸ், ஜோர்டன், நைஜிராய, ஓமன், பெரு ஆகிய நாடுகளுக்கு வழங்கியுள்ளது.
மேலும் அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பூட்டான், வங்கதேசம், நேபாளம், மாலத்தீவு, மொரிஷியஸ், இலங்கை , மியான்மர் நாடுகளுக்கும் இந்தியா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை அனுப்பியுள்ளது
இந்நிலையில், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோன குட்டரெஸின் செய்தித்தொடர்பாளர் ஸ்டெபானி துஜாிர்க நேற்று நிருபர்களுக்கு காணொலி மூலம் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், உலக நாடுகளுக்கு மலேரியா மாத்திரையான ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை இந்தியா அனுப்புவது குறித்து கேட்டனர்.
அதற்கு அவர் கூறுகையில் “ அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுக்கும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா அனுப்பி வருவது உண்மையில் பாராட்டத்தக்கது. இந்தியாவுக்கு ஐ.நா. சார்பில் சல்யூட் செய்கிறோம். இந்தியாவைப் போல் இந்த இக்கட்டான ேநரத்தில் உலக நாடுகளுக்கு உதவி செய்யும் அனைத்து நாடுகளுக்கும் சல்யூட் செய்கிறோம்.
இந்தியா மற்ற நாடுகளுக்கு உதவி செய்ததைப் போல், உதவி செய்யும் இடத்தில் இருக்கும் அனைத்துநாடுகளும் மற்ற நாடுகளுக்கு இந்தநேரத்தில் உதவ வேண்டும்” எனத் தெரிவித்தார்