சவுத் அன்வர் 
உலகம்

ஒரே வென்டிலேட்டரில் 7 பேருக்கு சிகிச்சை அளிக்கும் எளிய கருவி- பாகிஸ்தான் டாக்டர் வடிவமைப்பு

செய்திப்பிரிவு

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிப்பதில் பற்றாக்குறை நிலவுகிறது. இவர் கனெக்டிகட் மாகாண செனட் உறுப்பினராகவும் இருக்கிறார்.

இவர் ஒரு வென்டிலேட்டர் மூலம் 7 நோயாளிகளுக்கு ஒரேநேரத்தில் செயற்கை சுவாசம் அளிக்கும் வகையில் கருவியைக் கண்டுபிடித்துள்ளார். இது அமெரிக்காவில் மருத்துவத் துறையினரால் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு வென்டிலேட்டர் மூலம் பலருக்கு சிகிச்சைஅளிக்க எளிமையான ‘ஆக்ஸிஜன்பிரித்தனுப்பும் கருவியை’ அன்வர்வடிவமைத்துள்ளார்.

அத்துடன் தனது எளிமையான கருவி குறித்து பேஸ்புக்கிலும் வெளியிட்டார். இதுதொடர்பான வீடியோவையும் இலவசமாக பதிவிறக்கம் செய்து யார் வேண்டுமானாலும் அதுபோல் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதை அமெரிக்காவில் மட்டுமன்றி 100 நாடுகளில் உள்ள பலர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இதுகுறித்து நுரையீரல் துறையில் டாக்டராகப் பணிபுரியும்அன்வர் அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, ‘‘நான் வெறும் டாக்டர்தான். அரசு கொள்கைகள் உருவாக்குபவன் அல்ல. ஆனால், நிலைமையை சமாளிக்க வேறு பல வழிகள் உள்ளன. கரோனா பாதித்துள்ள இந்த உலகுக்கு உதவி செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT