உலகம்

வீட்டுக்குள்ளேயே இருங்கள்: ஜப்பான் பிரதமர் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக வீட்டுக்குள்ளேயே இருங்கள் என்று நாட்டு மக்களுக்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜப்பானில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கைப் பின்பற்றுமாறு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஜப்பான் பிரதமர் கூறும்போது, “தயவுசெய்து வெளியே செல்வதைத் தவிருங்கள். தனிநபர்கள் நடவடிக்கையைப் பொறுத்தே தொற்றைக் குறைக்க முடியும்” என்றார். மேலும், கரோனா நிவாரண நிதி தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்திற்கு மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜப்பானில் கரோனா வைரஸால் 9,231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 190 பேர் பலியாகியுள்ளனர்.

கரோனா தொற்றுக்கு அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஈரான் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 21,83,692 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1,46,870 பேர் பலியாகியுள்ளனர்.

SCROLL FOR NEXT