கரோனா வைரஸுக்கு இதுவரை உலக அளவில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், மருத்துவ உதவிப்பணியாளர்கள் பலியாகியுள்ளனர், அவ்வாறு மனிதனிலிருந்து இன்னொருவருக்குப் பரவும் சந்தர்ப்பங்களைக் குறைப்பதற்காக லெபனான் நாட்டு நிபுணர்கள் 2 ரோபோக்களை வடிவமைத்துள்ளனர்.
இது வியாழனன்று சோதனை முறையில் அஷ்ரபியேவில் உள்ள கெய்ட்டவி மருத்துவமனையில் இந்த ரோபோக்கள் கரோனா பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ரோபோக்கள், கேமரா, குரல் மூலம் செய்தி பரிமாற்றம் ஆகியவை இணையதள இணைப்பின் மூலம் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
இரண்டு ரோபோக்களில் ஒன்று கூரியர் ரோபோ, இது சளி முதலான பரிசோதனைகளில் நர்ஸ்களுக்கு உதவுகிறது. அதாவது பரிசோதனை செய்ய வேண்டிய சாம்பிள்கள் அடங்கிய குழாய்களை ரோபோ எடுத்துச் செல்கிறது.
இன்னொரு ரோபோ அவசர நிலை மருத்துவ அறைகளில் சானிட்டைஸர்கள் கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இது மருத்துவர்களிடையே பெரிய நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.