உலகம்

வங்​கதேச நாடாளு​மன்ற தேர்தலில் 55% வாக்குப் பதிவு - இன்று இறுதி முடிவு​கள் தெரியவரும்

செய்திப்பிரிவு

டாக்கா: வங்​கதேசத்​தில் நேற்று நடை​பெற்ற நாடாளுமன்ற தேர்​தலில் 55 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின. வங்கதேசத்​தில் ஏற்பட்ட மாணவர்கள் வன்முறையால் அவாமி லீக் தலை​வர் ஷேக் ஹசீ​னா பிரதமர் பதவியில் இருந்து விலகி இந்​தி​யா​வில் தஞ்​சம் அடைந்​தார். இதன் பிறகு வங்​கதேசத்​தில் முகமது யூனுஸ் தலை​மையி​லான இடைக்​கால அரசு ஆட்சி நடத்தி வரு​கிறது.

இந்த சூழலில் வங்​கதேச நாடாளு​மன்ற தேர்​தல் நேற்று நடை​பெற்​றது. காலை 7.30 மணிக்கு தொடங்​கிய வாக்​குப்​ப​திவு மாலை 4.30 மணிக்கு நிறைவடைந்​தது. இதில் 55 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின.வங்​கதேசத்​தில் மொத்​தம் 300 நாடாளு​மன்ற தொகு​தி​கள் உள்​ளன.

          

தற்​போதைய தேர்​தலில் ஷேக் ஹசீ​னா​வின் அவாமி லீக் போட்​டி​யிட தடை விதிக்​கப்​பட்டு உள்​ளது. மற்​றொரு பிரதான கட்​சி​யான வங்​கதேச தேசிய கட்சி (பிஎன்​பி) தலை​மை​யில் 10 கட்​சிகள் கூட்​டணி அமைத்து போட்டியிடு​கின்​றன. அடிப்​படை​வாத கொள்​கைகளை பின்​பற்​றும் ஜமாத் - இ – இஸ்​லாமி தலை​மை​யில் 11 கட்சிகள் கூட்​டணி அமைத்து தேர்​தலை சந்​திக்​கின்​றன.

இந்த கூட்​ட​ணி​யில் மாணவர்​கள் அமைப்​பு​கள் உருவாக்கிய தேசிய குடிமக்​கள் கட்சி (என்​சிபி) இடம் பெற்று உள்​ளது. நாடாளு​மன்ற தேர்​தலில் பிஎன்பி கூட்டணி, ஜமாத் - இ – இஸ்​லாமி கூட்​ட​ணிக்கு இடையே நேரடிப் போட்டி நில​வு​கிறது. இவை தவிர 10 கம்​யூனிஸ்ட் கட்​சிகள் இணைந்து ஜனநாயக ஐக்​கிய முன்​னணி என்ற பெயரில் போட்​டி​யிடு​கின்​றன.

ஜாதியா கட்சி தலை​மை​யில் பல்வேறு கட்​சிகள் இணைந்து தேசிய ஜனநாயக முன்​னணி என்ற பெயரில் போட்டியிடுகின்றன. ஆட்​சி​யமைக்க 151 எம்​பிக்​கள் ஆதரவு தேவை என்ற நிலை​யில் பிஎன்பி கூட்​டணி 150-க்கு மேற்​பட்ட தொகு​தி​களைக் கைப்​பற்​றும் என்​று கருத்​துக் கணிப்​பு​கள் தெரிவித்துள்ளன.

நேற்று மாலை 4.30 மணி முதல் வாக்​கு​களை எண்​ணும் பணி தொடங்​கியது. நள்​ளிரவு நில​வரப்​படி பல்​வேறு தொகு​தி​களின் வாக்கு எண்​ணிக்​கை​யில் பிஎன்பி கட்சி முன்​னிலை​யில் இருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்ளன. இன்று காலை 10 மணி அளவில் முழு​மை​யான முடிவு​கள் தெரிய​வரும். பிஎன்பி வெற்றி பெற்​றால், அதன் தலை​வர் தாரிக் ரஹ்​மான் பிரதம​ராக பதவி​யேற்​பார் என அரசி​யல் நோக்​கர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT