கோப்புப்படம் 
உலகம்

அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரம் பேர் உயிரிழப்பு: கரோனாவுக்கு பலி 32 ஆயிரத்தைக் கடந்தது

பிடிஐ

அமெரிக்காவில் கரோனா வைரஸின் தாக்கம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது, அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 4,491 பேர் உயிரிழந்துள்ளனர், இதன் மூலம் பலியோனார் எண்ணிக்கை32 ஆயிரத்தைக் கடந்துவிட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஆனால் கரோனா வைரஸ் உயிரிழப்பு குறித்து கண்கணித்து வரும் வேர்ல்ட்ஓமீட்டர் இணையதளத்தின் கணிப்பின்படி, அமெரிக்காவில் உயிரிழப்பு 34 ஆயிரத்து 617 ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது

அமெரிக்காவில் நேற்று இரவு 8.30 மணிநிலவரப்படி 4,491 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதான் அந்நாட்டில் கரோனா வைரஸுக்கு எதிராக ஒரு நாளில் நிகழ்ந்த அதிகபட்ச உயிழப்பாகும்.

இதில் நியூயார்க் நகரில் மட்டும் இந்த வாரத்தில் 3 ஆயிரத்து 778 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது வியாழக்கிழமை இரவு வரை அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புக்கு கிடைத்த தகவலின்படி கரோனா வைரஸுக்கு 24 மணிநேரத்தில் 4,141 பேர் உயிரிழந்ததையடுத்து, பலி 32 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதிலும் கடந்த இரு நாட்களாக உயிரிழப்பு கடுமையாக அதிகரித்துள்ளது.

கரோனாவுக்கு உயிழப்பைச் சந்தித்த நாடுகளிலேயே அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காதான், அங்கு 32 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதைத்தொடர்ந்து இத்தாலியில் 22,179 பேரும், ஸ்பெயினில் 19,130 ேபரும், பிரான்ஸில் 17,920 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் ேநற்று புதிதாக 29ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, அங்கு 6.77 லட்சமாக கரோனா பாஸிட்டிவ் அதிகரித்துள்ளது. இதுவரை 57 ஆயிரம் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT