உலகம்

யுகேவில் கரோனா தொற்றுக்கு பலி எண்ணிக்கை 12,868 ஆக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

யுகேவில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 12,868 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில், “ யுகேவில் கடந்த 24 மணிநேரத்தில் 761 பேர் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து யுகேவில் கரோனா வைரஸுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 12,868 ஆக அதிகரித்துள்ளது. யுகே முழுவதும் 3,13,769 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சுமார் 98,476 பேருக்கு கரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக யுகே சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளியை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலிறுத்தியுள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரில் பரவிய கரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனா தொற்றுக்கு அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஈரான் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 20,83,913 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1,34,658 பேர் பலியாகியுள்ளனர்.

SCROLL FOR NEXT