பிரதிநிதித்துவப் படம். 
உலகம்

வர்ஜீனியா நர்சிங் ஹோமில் மட்டும் 45 பேர் கரோனாவுக்குப் பலி: கரோனாவுக்கு எதிரான போரில் தோற்று வருகிறோம்: மருத்துவர்கள் வேதனை 

செய்திப்பிரிவு

அமெரிக்காவின் வர்ஜீனியாவில் நீண்ட நாள் மருத்துவ சிகிச்சை நர்சிங் ஹோம் ஒன்றில் 45 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேண்டர்பரி மறுவாழ்வு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஜேம்ஸ் ரைட் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நர்சிங் ஹோமில் மட்டும் சுமார் 100 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

“பல ஆண்டுகளாக நாங்கள் அக்கறை எடுத்து பார்த்து வந்த நோயாளிகள் இவர்கள், கரோனா என்பது சிகிச்சையில்லாத கடைசி வைரஸ் என்று நாங்கள் நினைக்கவில்லை. இது போராட்டம்தான் ஆனால் இதில் நாம் தோல்வியடைவோம் போல்தான் உள்ளது. பகலிரவு பாராமல் 24/7 என்று இதனுடன் போராடி வருகிறோம்.

பலியானவர்களை எங்கள் குடும்பத்தினர் போல்தான் பார்த்து வந்தோம். எங்கள் முன்னணி ஊழியர்கள் 10-15 ஆண்டுகளாக இவர்களை கவனித்து வந்துள்ளனர். தெரிந்தவர்கள் பழக்கமானவர்கள் கண் முன்னே சாகிறார்கள் ஆனால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது ஆழ்ந்த மன பாதிப்பை ஏற்படுத்துவதாகும்.

போதிய சுகாதாரப் பணியாளர்கள் இல்லை, போதிய சாதனங்களும் இல்லை. ஊழியர்கள் இல்லாமல் கரோனா நோயாளிகளை தனித்தனியாக வைத்து சிகிச்சை செய்வது என்பது கிட்டத்தட்ட இயலாத ஒரு விஷயம்.

ஆனால் 86 குடியிருப்பு வாசிகள் குணமடைந்துள்ளனர்” என்றார் டாக்டர் ஜேம்ஸ் ரைட்.

SCROLL FOR NEXT