வரும் செப்டம்பர் மாதத்தில் பூமி மீது விண்கல் மோதும் என்றத் தகவல் குறித்து அச்சப்பட தேவையில்லை என்று நாசா தெளிவுபடுத்தியுள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் 15 மற்றும் 28 தேதிகளுக்குள் மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியின் மீது மோதவிருப்பதாகவும், இதனால் ஏற்படும் பெரும் சேதத்தால் பூமி தனது அழிவை சந்திக்கும் என்றும் பரபரப்பான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
பல இணையதளங்கள் விண்கற்களை தாங்கள் பின்தொடர்வதாகவும் அவை பூமியை நோக்கி விழ இருப்பதாகவும் மக்கள் மத்தியில் பீதி கிளப்பப்படுகிறது.
இது குறித்து நாசா மேலாளர் பால் சடோஸ் கூறும்போது, "பூமியை நோக்கி விண்கல் விழும் என்பதான கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த தேதிகளைத் தாண்டியும் எந்த விண்கல்லும் பூமியை தாக்காது.
நாங்கள் தொடர்ந்து அதனை ஆராய்ந்து வருகிறோம். அடுத்த நூறு ஆண்டுகளுக்கு இதுபோல எந்த பாதிப்பும் பூமிக்கு இருக்காது என்பது உறுதி. அத்தகைய தூரத்தில் விண்கற்கள் அல்லது வால் நட்சத்திரங்கள் எதுவும் பூமியை நோக்கி வரவில்லை. அவ்வாறு ஏதேனும் விழுந்தாலும் பாதிப்பு வெறும் 0.01 சதவீதமே வாய்ப்பு இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.