உலகம்

கரோனா வைரஸ் தொற்றை முன்பே தடுத்திருக்க முடியும்: அமெரிக்க தத்துவயியல் நிபுணர் நோம் சாம்ஸ்கி கருத்து

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்றை முன்பே தடுத்திருக்க முடியும் என்று அமெரிக்க தத்துவயியல் நிபுணரும், மொழியியல் நிபுணரு மான நோம் சாம்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார்.

91 வயதான நோம் சாம்ஸ்கிக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அவர் தன்னைத்தானே தனி மைப்படுத்திக் கொண்டார். இந் நிலையில் குரோஷியாவைச் சேர்ந்த தத்துவ நிபுணர் ஸ்ரெகோ ஹோவர் டுடன் அவர் கரோனா வைரஸ் குறித்து நடத்திய விவாதத்தை அல் ஜசீரா பத்திரிகையில் கட்டுரையாக எழுதியுள்ளார் சாம்ஸ்கி. அந்தக் கட்டுரையில் நோம் சாம்ஸ்கி கூறியிருப்பதாவது:

இந்த கொடிய கரோனா வைரஸ் நோய்த் தொற்றை நாம் முன்ன தாகவே தடுத்திருக்க முடியும். இதனை தடுப்பதற்க்குரிய போது மான தகவல்கள் நமக்கு முன்ன தாகவே கிடைத்துவிட்டன. குறிப்பாக சொல்ல வேண்டு மென்றால் இது போன்ற ஒரு வைரஸ் தொற்று அமெரிக்காவில் பரவுவதற்குரிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே எச்சரிக் கப்பட்டது.

சுகாதார பாதுகாப்புக்கான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மையம், உலக பொருளாதார மன்றம் மற்றும் பில் கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் இதுதொடர்பாக எச்சரிக்கப்பட்டது. ஆனால் அதை யாருமே பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அரசியல் அமைப்புகளின் துரோகத் தாலேயே இந்த நோய்த் தொற்று மோசமான சிக்கலாக மாறிவிட்டது.

கடந்த டிசம்பர் 31-ம் தேதியே, உலக சுகாதார நிறுவனத்திடம் சீனா இது குறித்து தெரிவித்துள்ளது. நிமோனியா போன்ற அறிகுறிகள் அப்போது ஏற்பட்டதாக சீனா தகவல் தந்திருக்கிறது. தகவல் கொடுத்த ஒரு வாரத்துக்கு பின்பு கரோனா வைரஸை சீனா விஞ்ஞானி கள் கண்டுபிடித்தனர். இது குறித்த விரிவான தகவல்களை உல குக்கு அவர்கள் அப்போதே அளித்து விட்டனர்.

இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க சீனா, தென் கொரியா, தைவான், சிங்கப்பூர் போன்ற நாடு கள் சில நடவடிக்கைகளை கொண்டு வந்தன. இதனால் அந்த நாடுகளில் ஓரளவாவது கரோனா பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த வைரஸ் பரவலை கட் டுப்படுத்துவதில் மேற்கத்திய நாடுகள் வெவ்வேறு நடைமுறை களை பின்பற்றின.

ஐரோப்பாவில் முதலில் ஜெர்மனி நாடு சில நடவடிக்கை களை எடுத்தது. வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கிறதா என மக்களை பரிசோதனை செய்தது. பிறருக்கு உதவாமல் அவர்கள் சுயநலமாக நடந்து கொண்டாலும், குறைந்தபட்சம் அவர்கள் நாட்டில் பரவாமல் இருக்க சில நல்ல நடவடிக்கைகளை எடுத்தனர். ஆனால் இந்த நடவடிக்கைகளை மற்ற நாடுகள் எடுக்காமல் புறக் கணித்தன. குறிப்பாக பிரிட்டனும், அமெரிக்காவும் இதனை கையாண் டதால் நிலைமை மோசமாகி விட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கரோனா வைரஸ் தொற்று பெரும் சிக்கலே இல்லை. இது வெறும் காய்ச்சல்தான் என்று ஒரு நாள் தெரிவித்தார். ஆனால் அதற்கு அடுத்தநாளே இந்த வைரஸ் தொற்றானது பயங்கர மான நெருக்கடி. இது குறித்து அனைத்தும் எனக்கு தெரியும் என் கிறார்.

அதற்கு அடுத்தநாளே, நாம் நம் பணிக்கு திரும்ப வேண்டும். ஏனெனில் நான் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்கிறார். அவர் நடந்துகொண்ட விதம் சரியில்லை. இந்த உலகம் கரோனாவை கையாண்ட விதம் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

மனிதகுல வரலாற்றில் முன்பு எப்போதும் நடக்காத பேரழிவின் விளிம்பை நோக்கி நாம் செல்கிறோம். பள்ளத்தை நோக்கிய பந்தயத்துக்கு அதிபர் ட்ரம்பும் அவரது கூட்டாளிகளும் தலைமை தாங்கி உள்ளனர். வேறு ஒரு அச்சுறுத்தலையும் நாம் சந்திக் கிறோம். அணு ஆயுத போர் குறித்த அச்சுறுத்தல் ஒன்று. மற்றொன்று புவி வெப்பமயமாதல்.

கொரோனா வைரஸ் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இருந்த போதிலும் அதிலிருந்து நாம் மீண்டு விட முடியும். ஆனால், அடுத்த இரண்டு அச்சுறுத்தல்களான அணு ஆயுத போர், புவி வெப்பமயமாதல் ஆகியவற்றிலிருந்து நாம் மீளவே முடியாது. அழிவு மட்டுமே நிகழும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார் சாம்ஸ்கி.

SCROLL FOR NEXT