கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அமெரிக்காவில் அதிகரி்த்து வருகிறது, தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் உயிரிழப்பு அங்கு ஏறக்குறைய 2 ஆயிரத்தை நெருங்கியது. அங்கு ஒரேநாளில் ஆயிரத்து 900 பேர் உயிரிழந்தனர்.
ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 691 ஆகவும், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 68 ஆயிரத்து 566 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை அங்கு 26 ஆயிரம் பேர் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனர். அங்கு நேற்று ஒரேநாளில் 33 ஆயிரம் பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் மிக மோசமாக நியூயார்க் நகரில் மட்டும் நேற்று ஏறக்குறைய 800 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அந்த நகரில் தொடர்ந்து 3-வது நாளாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தெந்த வயதினர் குறித்து வெள்ளை மாளிகை புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், சராசரியாக பாதிக்கப்பட்டுள்ள 100 பேரில் 11 பேர் 25 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 வயது முதல் 45 வயதுக்குள் இருப்பவர்கள் 17 சதவீதமும், 45 வயத முதல் 65 வயது வரை உள்ளவர்கள் 21 சதவீதமும்கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 25 வயத்துக்குட்பட்டோர் 2 லட்சம் பேர் பரிசோதனை செய்துள்ளனர், 25 முதல் 45 வயதுடைய மக்கள் 50 லட்சத்துக்கு அதிகமாகவும், 45 வயதிலிருந்து 65 வயது வரை உள்ளளவர்கள் 50-லட்சத்துக்கும் அதிகமாகவும் பரிசோதனை செய்துள்ளனர்.
இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனையில் பெண்களைக் காட்டிலும் ஆண்கள்தான் அதிகளவில் கரோனாவில் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது
இதில் 65 வயது முதல் 85வயதுவரையிலான மக்கள் 22 சதவீதம் பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது பரிசோதனையில் தெரியவந்துளளது, 85 வயதுக்குட்பட்டோர் 30 ஆயிரம் பேருக்கு மேல் பரிசோதிக்கப்பட்ட நிலையில் அதில் 24 சதவீதம் பேருக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது
வெள்ளை மாளிகையில் கரோனா பெருந்தொற்று நோய் குறித்து செய்தி ஒருங்கிணைப்பாளர மருத்துவர் டேபோரா பிர்க்ஸ் நிருபர்களிடம் கூறுகையில் “ அமெரிக்க மக்களில் யாருக்கெல்லாம் கரோனா அறிகுறிகள் இருக்கிறதோ அவர்கள் பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.
இதுவரை பெண்களில் 10 பேரில் 6 பேர் பரிசோதனைக்கு உட்பட்டுள்ளார்கள், ஆண்களில் 10 பேரில் 4 பேர் பரிசோதனைக்கு உட்பட்டுள்ளார்கள். இன்னும் ஆண்கள் பரிசோதனைக்கு முன்வர வேண்டும். கரோனா வைரஸாஸ் பாதிக்கப்பட்டிருப்பதில் 16 சதவீதம் பெண்களும், 23 சதவீதம் ஆண்களாவர்.
கரோனா வைரஸ் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள 10 மாநிலங்களில் 6 மாநிலங்களில் கரோனா பாசிட்டிவ் 10 சதீவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. இதில் முதியோர் மட்டுேம அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். நியூயார்க், நியூஜெர்ஸி நகரங்களைக் காட்டிலும் வாஷிங்டன், பிலடெல்பியா, பால்டிமோர், டென்வெர் ஆகிய நகரங்ளில் கரோனா பாதிப்பு குறைவாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்