பிரதிநிதித்துவப்படம் 
உலகம்

நடுங்கவைக்கும் கரோனா: உலகளவில் பாதிப்பு 15 லட்சத்தைக் கடந்தது; 88 ஆயிரம் பேர் உயிரிழப்பு; அமெரிக்காவைவிட ஸ்பெயினில் அதிக பலி

ஐஏஎன்எஸ்

கரோனா வைரஸின் கோரப்பிடி உலகச் சமூகத்தை நாளுக்கு நாள் அச்சுறுத்தி வருகிறது, உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தையும், பலியானோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சென்டர் ஃபார் சிஸ்டம்ஸ் சயின்ஸ் அன்ட் எஞ்சினியரிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தைக் கடந்து 15 லட்சத்து 17 ஆயிரத்து 95 ஆக இருக்கிறது. உயிரிழந்தவர்கள் எண்ணி்க்கை 88 ஆயிரத்து 441 பேராக அதிகரித்துள்ளது.
அதேசமயம் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.30 லட்சத்தை நெருங்குகிறது

அதில் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்தான். குறிப்பாக அமெரிக்காவில் கடந்த இரு நாட்களாக உயிரிழப்புகள் மிக மோசமாக அதிகரித்து இரு நாட்களுமே ஏறக்குறைய நாள்தோறும் 2 ஆயிரம் பேர்வரை உயிரிழந்துள்ளர்கள்.



கரோனா வைரஸால் அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 774 பேராக அதிகரித்துள்ளது, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 34 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஏறக்குைறய 22 ஆயிரம் பேர் கரோனா நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் ேநற்று ஒரே நாளில் 31 ஆயிரம் பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அமெரிக்காவைவிட ஸ்பெயினில் அதிகமானோர் கரோனா வைரஸால் பலியாகியுள்ளார்கள். ஸ்ெபயினில் இதுவரை 14 ஆயிரத்து792 பேர் உயிரிழந்துள்ளனர், ஒரு லட்சத்து 48 ஆயிரத்து220 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 48 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்

இத்தாலிதான் உலகிலேயே அதிகமான உயிரிழப்பை கரோனா வைரஸால் சந்தித்துள்ளது.இத்தாலியில் இதுவரை 17,669 பேர் உயிரிழந்துள்ளனர், நேற்றுகூட 542 ேபர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இத்தாலியில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 422 ஆக உயர்ந்துள்ளது. கரோனா நோயிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரமாக இருக்கிறது

பிரான்ஸ் நாட்டில் கரோனா வைரஸால் நேற்று 541 பேர் பலியானதைத் தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 861 ஆக அதிகரித்துள்ளது, அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 950 ஆக இருக்கிறது.

பிரிட்டனில் நேற்று ஒரே நாளில் கரோனா வைரஸால் 938 பேர் உயிரிழந்தனர் , இதனால் பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 97 ஆக அதிகரித்தள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 ஆயிரத்து 733 ஆகவும் உயர்ந்துள்ளது.

ஜெர்மனியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 296 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 349 ஆகவும் அதிகரித்துள்ளது. ஜெர்மனியில் நேற்று ஒரே நாளில் 333 பேர் பலியானார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

SCROLL FOR NEXT