உலகம்

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 82,145 பேர் பலி

செய்திப்பிரிவு

உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 82,136 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் ஜான் ஹோப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் கூறும்போது, “உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு 82, 145 பேர் பலியாகியுள்ளனர். 14,31,375 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

இத்தாலி, பிரான்ஸ், யுகே, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கரோனா வைரஸ் தொற்றால் கடுமையான உயிரிழப்பைச் சந்தித்துள்ளன.

அமெரிக்காவில் கரோனா தொற்றால் 4,00,546 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,857 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினில் 1,41,942 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14,045 பேர் பலியாகியுள்ளனர். இத்தாலியில் கரோனா தொற்றுக்கு 1,35,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17,127 பேர்பலியாகி உள்ளனர். பிரான்ஸில் 1,09,069 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,328 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், சீனா ஆகிய நாடுகள் கரோனா வைரஸால் அதிகம் பாதிப்பைச் சந்தித்துள்ளன

SCROLL FOR NEXT