அமெரிக்காவில் கரோனா வைரஸின் பாதிப்பு உச்சக்கட்டத்தில் இருக்கிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 1,970 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரித்துள்ளது, 33 ஆயிரம் பேருக்கு நேற்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும் என்று சீனாவுக்கு 2019, டிசம்பர் மாதமே ெதரிந்திருந்தும் மறைந்துவிட்டது. ஆனால், ஜனவரி 22-ம் தேதி இந்த வைரஸ் உலக நாடுகளுக்கு பரவிட்டது. ஆனால், அப்போது கூட உலக சுகாதார அமைப்பு சுகாதார அவசரநிலையை ஜனவரி 30-வரை அறிவிக்கவில்லை.
உலக சுகாதார அமைப்பின் தாமதமான செயல்கள், பல்வேறு பின்விளைவுகளை உலக நாடுகளுக்கு ஏற்படுத்திவி்ட்டது. சவுத்தாம்டன் பல்கலைக்கழக ஆய்வின்படி சீனாவில் கரோனா வைரஸின் தாக்கம் 95 சதவீதம் குறைந்துவிட்டது, இன்னும் 3 வாங்களில் அங்கு அடங்கிவிடும் என்கிறது. ஆனால் மற்ற நாடுகளில் பாதிப்பு தொடர்கிறது. உலக நாடுகள் அனைத்துக்கும் சமமாக உதவாமல் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு மட்டும் சாதகமாக செயல்பட்டு மக்களைக் காக்க தவறிவி்ட்டது என தீர்மானத்தில் குற்றம்சாட்டியுள்ளனர்
ஆனால், ஐ.நா.அவை தலைவரின் செய்தித்தொடர்பாளர் உலக சுகாதார அமைப்பை புகழ்ந்துள்ளார். ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் செய்தித்தொடர்பாளர் நேற்று அளித்த பேட்டியில், “ கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக சுகாதார அமைப்பு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
டெட்ராஸ் கேப்ரியேசிஸ் தலைமையில் உலக நாடுகள் அனைத்தும் ஏராளமான வழிகாட்டல்களையும், உதவிகளையும், பயிற்சிகளையும் வழங்கி சிறப்பாக உலக சுகாதார அமைப்பு செயல்படுகிறது. சர்வதேச சுகாதார முறையின் வலிமையை உலக சுகாதார அமைப்பு காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்
இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் கோபம் உலக சுகாதார அமைப்பின் திரும்பியுள்ளது. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “உலக சுகாதார அமைப்பு உண்மையில் தவறு செய்துவிட்டது. சில காரணங்களுக்காக உலக சுகாதார அமைப்புக்கு அதிகமான நிதியை அமெரி்க்காதான் வழங்கியது ஆனால், அந்த அமைப்பு சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது.
கரோனாவைரஸை கட்டுப்படுத்தும் விஷயத்தில் உலக சுகாதார அமைப்பின் பரி்ந்துரைகள் வெளிப்படையாக இல்லை, சீனாவுக்கு சாதாகமாகவே இருக்கிறது. அதனால் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்த ஆதரவு வலுத்து வருகிறது. ஆனால் அந்த பரிந்துரைகளை நான் ஏற்கவில்லை” எனத் தெரிவித்திருந்தார்