உலகம்

துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,013 பேர் கரோனா தொற்றால் பாதிப்பு; 76 பேர் பலி

செய்திப்பிரிவு

துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 3,013 பேருக்கு கரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. 76 பேர் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து துருக்கியின் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,013 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து துருக்கியில் கரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23, 934 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் பலியாகினர். தற்போதைய நிலவரப்படி கரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 500-ஐ தாண்டியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 7,00க்கு அதிகமானவர்கள் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து திரும்பியுள்ளனர்.

மேலும் 30 நகரங்களில் 15 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் 190 நாடுகளில் நோய்த் தொற்றை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமானவர்கல் உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 64,734 பேர் பலியாகினர்.

கரோனா வைரஸுக்கு அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.

இதில் ஐரோப்பிய நாடுகளான இத்தாலியும், ஸ்பெயினும் கடுமையான உயிரிழப்பை சந்தித்துள்ளன.

SCROLL FOR NEXT