பிரான்ஸிலிலும் கரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. அந்தநாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரேநாளில் 588 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 91 ஆக அதிகரித்துள்ளது
கரோனா வைரஸ் பிரான்ஸில் பரவத்தொடங்கியதிலிருந்து ஒரேநாளில் ஏற்பட்ட மிக அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும்.
இதுகுறித்து பிரான்ஸ் நாட்டின் மூத்த மருத்துவ அரசு அதிகாரி ஜெரோம் சாலமோன் நிருபர்களிடம் கூறுகையில் “ பிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் 588 பேர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்கள். கரோனா வைரஸ்பாதிப்பு தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் ஏற்பட்ட மிக அதிகபட்ச உயிரிழப்பாகும். ஒட்டுமொத்தமாக 5 ஆயிரத்து91 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
கடந்த சில நாட்களாக பாதிப்பின் தாக்கம் குறைந்து வருவதாக நினைக்கிறோம், அவசர அழைப்புகள்வருவதும் குறைந்திருக்கிறது.ஆனால், இதை வைத்து மட்டும் எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. இன்னும் பிரான்ஸ் கரோனா வைரஸின் உச்ச பட்ச எல்லைக்குச் செல்லவில்லை. ஈஸ்டர் பண்டிகை விடுமுறைக்கு மக்கள் பல்வேறு சுற்றுலா இடங்களுக்குச் செல்வார்கள், ஆனால் இந்த முறை வீ்ட்டுக்குள்ளே இருக்குமாறு கேட்டுக்கொள்ளோம் ” எனத் தெரிவித்தார்
ஆனால் மருத்துவமனை தவிர்த்து வீடுகளில் வசிக்கும் முதியோர்கள் இறந்தது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால், இதுவரை அந்த வகையில் 1,416 பேர் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் உயிரிழந்திருக்கலாம். அந்த வகையில் பார்த்தால் பிரான்ஸில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 507 ஆக அதிகரிக்கும்
கடந்த மாதம் 17-ம் தேதியிலிருந்து பிரான்ஸில் லாக்-டவுன் அறிவிக்கப்பட்டு, நடைமுறையில் இருக்கிறது. கரோனா வைரஸ் அங்கு மெல்லப்பரவி வருவதைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டது.
இதுவரை பிரான்ஸில் 64 ஆயிரம் பேர்வரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 14 ஆயிரம் பேர் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளா்ர்கள். ஏறக்குறை 44 ஆயிரம் பேர்வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்