உலகம்

கரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த 49 நாட்கள் லாக்-டவுன் தேவை: கேம்பிரிட்ஜ் ஆய்வாளர்கள் தகவல் 

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவலைத் தடுத்து விட்டோமானால் அதன் வீரியம் 21 நாட்களில் காணாமல் போகும் என்பதால் 21 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் 21 நாட்களுக்கும் மேல் ஊரடங்கு தொடரும் என்ற வதந்திகளை நம்பவேண்டாம் என்று மத்திய அரசும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸை முழுமையாகக் கட்டுப்படுத்த 49 நாட்கள் தேவைப்படும் என்று கேம்பிரிட்ஜ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஏப்ரல் 30ம் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் 2 இந்தியர்களும் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதில் கணிதவியல் ஆய்வு மாதிரியில் கரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்த 49 நாட்கள் தேவைப்படும் என்று தெரிவிக்கின்றனர்.

கோட்பாட்டு பவுதிக துறையைச் சேர்ந்த அதிகாரி மற்றும் ராஜேஷ் சிங் என்ற இரண்டு ஆய்வாளர்கள் முதற்கட்டமாக 21 நாள் லாக்-டவுன் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். இது தொற்றுக்களின் எண்ணிக்கையைக் குறைக்க உதவுமே தவிர மீண்டும் கரோனா தொற்றாது என்பதற்கான உறுதியை அளிக்கவல்லது அல்ல என்கின்றனர்.

இதனையடுத்து 21 நாட்கள் லாக்-டவுனுக்குப் பிறகு தளர்த்தப்பட்டால் கரோனா தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்கின்றனர் இவர்கள்.

அதாவது 2வது மாதிரியில் 21 நாள் லாக்-டவுன் பிறகு 5 நாட்கள் தளர்வு பிறகு 28 நாட்கள் லாக்-டவுன் என்றாலும் தொற்றுக் குறைவது உறுதியானதல்ல என்று கூறும் இந்த ஆய்வாளர்கள், முதலில் 21 நாட்கள் பிறகு 28 நாட்களுக்கும் நீட்டிக்கப்பட்டு பிறகு ஒரு 18 நாட்கள் லாக் டவுன் செய்யப்பட வேண்டும் இந்த லாக்-டவுன்களுக்கு இடையே 5 நாட்கள் தளர்வுக் காலக்கட்டம் இருக்க வேண்டும் என்கின்றனர்.

இப்படிச் செய்தால் நோய்தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர். இடைவெளியில்லாமல் 49 நாட்கள் தொடர் லாக்-டவுன் என்றால் புதிய நோய்த்தொற்றை 10க்கும் கீழ் கொண்டு வர முடியும் என்று நம்பிக்கை கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

அதாவது தொடர் லாக்-டவுன் இடையிடையே லாக்-டவுன் தளர்வு என்று வைத்துக் கொண்டால் கரோனா தொற்றை வெகுவாகக் குறைக்க முடியும் என்று கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT