பிரான்ஸில் புதிதாக 2,599 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரான்ஸின் சுகாதாரத் துறை இயக்குனர் ஹெல்த் ஜெராமி சலோமன் கூறும்போது, “பிரான்ஸுல் சுமார் 2,599 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 40,000க்கும் அதிகமானவர்கள் கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸில் கோவிட் காய்ச்சலுக்கு
2,606 பேர் பலியாகியுள்ளனர். கரோனா வைரஸ் வெகு விரைவாகப் பரவுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிரான்ஸ் அதிபர் மேக்ரோன், கரோனா வைரஸ் காரணமாக இனி வரும் நாட்களில் பிரான்ஸ் கடினமான சூழலை எதிர்கொண்டுள்ளதாக வருத்தம் தெரிவித்திருத்தார்.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 தொற்று அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 33,000 பேர் பலியாகியுள்ளனர்.