கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க பொதுவெளியில் மக்கள் நெருக்கமாக நின்றால் ஆறுமாத சிறைத் தண்டனையை சிங்கப்பூர் அரசு விதித்துள்ளது.
இது தொடர்பான புதிய விதியை இன்று (வெள்ளிக்கிழமை) சிங்கப்பூர் அரசு அறிவித்தது.
முன்னதாக, சிங்கப்பூரில் கோவிட் 19 காய்ச்சலுக்கு 600க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கோவிட் 19 இரண்டு பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸ் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளி சிங்கப்பூர் அரசு இறங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சிங்கப்பூரில் பொதுவெளியில் நெருக்கமாக நிற்பவர்கள் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று புதிய விதிமுறையை சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூர் ஊடகங்கள், “ இந்த விதிமுறையின்படி மக்கள் வேண்டும்மென்றே அருகில் நிற்பது தடை செய்யப்படுகிறது. ஒருவருக்கொருவர் 1 மீட்டர் இடைவெளியில் நிற்க வேண்டும் என்று புதிய விதிமுறை அறிவுறுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கோவிட் 19 காய்ச்சலுக்கு சுமார் 5,32,263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 24,090 பேர் பலியாகியுள்ளனர்.