செவ்வாய்க் கோளில் புதிய பகுதியை நோக்கி நாசாவின் 'க்யூரியாசிட்டி' விண்கலம் செல்லத் தொடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டு செவ்வாயில் இறங்கிய அந்த விண்கலம், 2014ம் ஆண்டு மவுன்ட் ஷார்ப் எனும் மலை அடிவாரத்தை அடைந்தது. அங்கு 'மரியா பாஸ்' எனும் பகுதியில் இவ்வளவு நாட்கள் ஆய்வு நடத்தியது.
தனது ஆய்வின் முடிவில், அங்கு சிலிக்கா மற்றும் ஹைட்ரஜன் வேதிப்பொருட்கள் நிரம்பிய பாறைகளைக் கண்டறிந்தது. இதன் மூலம், அங்கு தாதுப் பொருட்கள் வடிவத்தில் நீர் இருக்கலாம் என்று தெரியவந்தது.
தற்போது, அந்த விண்கலம், மவுன்ட் ஷார்ப் மலை மீது ஏறத் தொடங்கியிருப்பதாக, விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து மாஸ்கோவில் உள்ள விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைமை ஆய்வா ளர் இகோர் மிட்ரோபனோப் கூறும் போது, "கடந்த மூன்று ஆண்டு களாக செவ்வாயில் க்யூரியாசிட்டி விண்கலம் பயணித்து வருகிறது. இதுவரை அது பயணித்த இடங்களைக் காட்டிலும் 'மரியா பாஸ்' பகுதியில் நான்கு மடங்கு அதிகமாக தண்ணீர் இருப்பது தெரியவந்துள்ளது" என்றார்.
2012ம் ஆண்டு செவ்வாயில் இறங்கியதில் இருந்து, அந்த விண்கலம், இதுவரை 11.1 கிலோமீட்டர் தூரத்துக்குப் பயணித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.