உலகம்

சட்ட விரோதமாகக் குடியேறியவர்களுக்கு கரோனா வைரஸ் சோதனை இல்லை என்று யார் சொன்னார்கள்? - அதிபர் ட்ரம்ப்

பிடிஐ

அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் உட்பட யாருக்கும் கரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை இல்லை என்று யாரும் மறுக்கவில்லையே அவர்களுக்கும் பரிசோதனை உண்டு என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சுமார் 1 கோடியே 10 லட்சம் பேர் ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் சட்ட விரோதமாகத் தங்கியுள்ளனர். இதில் ஆயிரக்கணக்கானோர் இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

கரோனா தொற்றுக்கு இதுவரை உலகம் முழுதும் சுமார் 173 நாடுகளில் 14, 461 பேர் பலியாகியுள்ளனர், சுமார் 336,000 பேருக்கு தொற்று பரவியுள்ளது.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “அவர்களுக்கும்தான் கரோனா வைரஸ் டெஸ்ட் எடுக்கப்படும். அவர்களை அவர்கள் நாட்டுக்கோ வேறு எங்கோ அனுப்ப விரும்பவில்லை.

தாங்கள் கரோனா வைரஸ் தொற்றுக்கான சோதனைக்குச் செல்லும் போது அமெரிக்க குடியேற்றத்துறையுடன் சட்ட விரோத குடியேறி என்று தெரிவிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் பல குடியேறிகள் டெஸ்ட் எடுத்துக் கொள்ள அச்சப்படுவதாக எழுந்த செய்திகளை அடுத்து ட்ரம்ப் இதனை அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 34,000 ஆக அதிகரிக்க 419 பேர் பலியாகியுள்ளனர்.

SCROLL FOR NEXT