உலகம்

வாங்கும் திறனை அதிகரிக்க மக்களுக்கு பரிசு கூப்பன்களை வழங்கும் சீனா

செய்திப்பிரிவு

மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க சீன அரசு தரப்பில் மக்களுக்கு பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

சீனாவின் ஹுபெய் மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பரில் கரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த நகரம் சீல் வைக்கப்பட்டது. கடந்த 4 மாத போராட்டத்துக்குப் பிறகு வூஹானில் கரோனா வைரஸ் தொற்று முழுமையாகக் கட்டுப் படுத்தப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது.

கரோனா வைரஸ் காரணமாக சீனாவின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. உள்நாட்டு வர்த்தகமும் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இந்த பொருளாதார இழப்பை ஈடு கட்ட சீன அரசு பல்வேறு நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தொழிற்சாலைகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட் டுள்ளன. மேலும் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க அரசு தரப்பில் மக்களுக்கு பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நுகர்வு தேவை அதிகரிக்கும் என்று சீன அரசு எதிர்பார்க்கிறது.

இதுகுறித்து சீனாவின் வேலை வாய்ப்பு துறை துணைத் தலைவர் ஹா ஜெங்யூ கூறும்போது, ‘‘மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வகை செய்யும் சிறப்பு திட்டங்களை அமல்படுத்த மாகாண அரசுகளை அறிவுறுத்தி யுள்ளோம். அதன்படி பல்வேறு நகரங்களில் மக்களுக்கு பரிசு கூப்பன் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் சீன பொருளாதாரத்தை மீட்டெடுக்க முயற்சி செய்து வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.

அமெரிக்கா, ஹாங்காங்கை ஒப்பிடும்போது சீனாவின் நடவடிக்கை போதுமானதாக இல்லை என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அரசு தரப்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் மாதம் ரூ.75,000 நிதியுதவி வழங்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

ஹாங்காங்கில் 70 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். கரோனா வைரஸால் அங்கு 256 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். கடுமையான பொருளாதார இழப்பும் ஏற்பட் டிருக்கிறது. பல ஆயிரம் பேர் வேலையிழப்பை சந்தித்துள்ளனர். இதை எதிர்கொள்ள ஹாங்காங் அரசு தரப்பில் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.90,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.

பிரிட்டனில் அனைத்து குடிமக்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படும் என்று அந்த நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். பிரான்ஸில் அனைத்து நிறுவனங் களும் ஊழியர்களுக்கு மாதாந்திர ஊதியத்தை தடையின்றி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான தொகையை அரசே வழங்கும் என்று அந்த நாட்டு அதிபர் இம்மானுவேல் உறுதியளித்துள்ளார்.

ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், அயர்லாந்து, போர்ச்சுகல், சுவீடன், டென்மார்க், நார்வே, பின்லாந்து, ஆஸ்திரியா, பெல்ஜியம், நெதர் லாந்து உள்ளிட்ட நாடுகளில் தொழிற்சாலைகளுக்கும் ஊழி யர்களுக்கும் பல்வேறு விதமான சலுகைகள் வழங்கப்பட்டுஉள்ளன. கரோனா வைரஸ் காரணமாக சீனாவின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. உள்நாட்டு வர்த்தகமும் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

SCROLL FOR NEXT