உலகம்

நியூயார்க்கில் கரோனா வைரஸால் 10,000 பேர் வரை பாதிக்கப்படலாம்: மேயர் தகவல்

செய்திப்பிரிவு

நியூயார்க்கில் சுமார் 10,000 பேர் வரை கரோனா வைரஸால் பாதிக்கப்படலாம் என்று அந்நகர மேயர் பில் டி பிளாசியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கோவிட்-19 காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 155 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அங்கு சுமார் 9 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 5 நாட்களாக கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது. நியூயார்க் நகரில்தான் அதிக அளவில் கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூயார்க்கில் 2,900 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 21 பேர் கோவிட் காய்ச்சலுக்குப் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் நியூயார்க்கில் கோவிட் காய்ச்சலுக்கு சுமார் 10,000 பேர் வரை பாதிக்கப்படலாம் என்று அந்நகர மேயர் பில் டி பிளாசியோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நியூயார்க் நகர மேயர் பில் டி பிளாசியோ கூறும்போது, “நேற்று மட்டும் நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு கோவிட்-19 காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது வேகமாக அதிகரித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். இன்று 1000 பேர் வரைக்கும் கோவிட் காய்ச்சல் இருப்பது உறுதிப்படுத்தப்படலாம். இந்த எண்ணிக்கையில் நாம் 10,000 வரை நெருங்க இருக்கிறோம். இது தூரம் இல்லை” என்றார்.

சீனாவில் பரவிய கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 8,809 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 157 நாடுகளில் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT