உலகம்

டெல்லி, ஆக்ரா, அசாமுக்குப் பயணம் மேற்கொண்ட நார்வே சுற்றுலாப் பயணிக்கு கரோனா காய்ச்சல்

செய்திப்பிரிவு

டெல்லி, ஆக்ராவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட நார்வே பயணிக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்தியா சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே கூறும்போது, “நார்வேவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கோவிட் காய்ச்சல் இருப்பது கோவாவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 6 ஆம் தேதி நார்வேவில் இருந்து புறப்பட்ட அந்த நபர் இந்தியாவில் டெல்லி, ஆக்ரா, அசாம், மேகாலயா ஆகிய பகுதிகளுக்குச் சுற்றுலா சென்றுள்ளார்.

இந்நிலையில் கோவாவுக்கு பிப்ரவரி 20 ஆம் தேதி வந்த அவருக்கு மார்ச் 10 ஆம் தேதி முதல் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு கோவிட் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு பனாஜி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இந்தியாவில் இதுவரை 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களை மார்ச் 31-ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT