உலகம்

உலக முழுவதும் கரோனா வைரஸால் 179,000 பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு

செய்திப்பிரிவு

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு சுமார் 179,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் கூறும்போது, “ உலகம் முழுவதும் கோவிட் காய்ச்சலுக்கு செவ்வாய்க்கிழமை மட்டும் 11,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கோவிட் காய்ச்சலுக்கு 1, 79,00 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் செவ்வாய்க்கிழமை உலகம் முழுவதும் 475 பேர் பலியாகி உள்ளனர்.

இதன் மூலம் உலக முழுவதும் கோவிட் காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 7,456 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கால்பந்து விளையாட்டுப் போட்டிகள், ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT