உலகம்

கரோனாவுக்கு அமெரிக்காவில் 22 லட்சம் பேர் பலியாகலாம், பிரிட்டனில் 5 லட்சம் பேர் மரணிக்கலாம்: பிரிட்டன் ஆய்வு ஒன்றில் அதிர்ச்சித் தகவல்

செய்திப்பிரிவு

லண்டன் இம்பீரியல் காலேஜ் மாடலிங் ஸ்டடி ஆய்வுக்குழுவினர் நடத்திய மாதிரி ஆய்வு முறையில் கரோனா வைரசுக்கு அமெரிக்காவில் சுமார் 22 லட்சம் பேர்களும் பிரிட்டனில் சுமார் 5 லட்சம் பேர்களும் மரணமடைவார்கள் என்று அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.

லண்டன் இம்பீரியல் காலேஜ் கணித உயிரியல் (Mathematical Biology)பேராசிரியர் நீல் பெர்கூசன் சீனாவுக்குப் பிறகு பெரிய அளவில் கரோனா பாதித்த இத்தாலியின் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் தரவு அடிப்படை மாதிரியில் இந்த ஆய்வை தலைமையேற்று நடத்தியுள்ளார்.

இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் என்ற முன்னிலை செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

கோவிட்-19 வைரஸ் பரவலை 1918 ஃப்ளூ காய்ச்சல் வைரசுக்கு ஒப்பிட்ட நீல் பெர்கூசன் கட்டுப்பாட்டு முறைமைகளை துரிதமாகச் செயல்படுத்தாவிட்டால், பிரிட்டனில் அரைமில்லியன்களுக்கும் மேலான பலிகளும் அமெரிக்காவில் சுமார் 2.2 மில்லியன் பலிகளும் நேரிடலாம் என்று எச்சரித்துள்ளார்.

த்னிமைப்படுத்துதல், பயணக் கட்டுப்பாடுகள் என்றக் கட்டுப்பாடுகள் போதாது என்று கூறும் இந்த ஆய்வு சமூகத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தாமல் போனால் 2,50,000 பேர் பலியாவார்கள் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வின் எச்சரிக்கைகளை அடுத்து பிரிட்டன் அரசு மேலும் சில கெடுபிடிகளை ஏற்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் ஆய்வுகளையும் புரிதல்களையும் தழுவி புதியக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த ஆய்வு மாடல் ஆய்வு முறையில் நடத்தப்பட்டுள்ளது, அதாவது ஒரு இடத்தில் அல்லது 2 இடங்களில் ஏற்படும் விளைவுகளைக் கொண்டு ஒட்டுமொத்தமாக அளவிடும் ஒரு இண்டக்டிவ் ஆய்வு முறையாகும். இண்டக்டிவ் ஆய்வுமுறை என்பது தனிப்பட்ட மாதிரிகளிலிருந்து பொதுப்படையான முடிவுகளை ஊகித்தறியும் தர்க்க முறையாகும்.

SCROLL FOR NEXT