ரியோ கடற்கரை. 
உலகம்

‘எல்லாம் கிளம்புங்க... வீட்டைப் பார்க்க போங்க’ - சிகப்பு ட்ரக்குகள், மெகாபோன்களுடன் பிரேசில் கடற்கரைகளில் புது கெடுபிடிகள்

ஏபி

கரோனா தொற்று காரணமாக ஷாப்பிங் மால்கள், சுற்றுலாத் தலங்கள், திரையரங்குகள் என்று அனைத்தும் மூடப்பட்ட நிலையில் மக்களுக்கு பொழுது போக்கு ஒன்று வீட்டிலேயே டிவி அல்லது வெளியே வந்தால் கடற்கரைக் காற்றுதான். ஆனால் பிரேசிலின் முக்கிய நகரான ரியோ டி ஜெனிரீயோவில் அதற்கும் அந்நாட்டு ஆட்சி ஆப்பு வைத்து விட்டது.

ரியோ கடற்கரையில் மக்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போது மெகாபோன்களுடன் அங்கு வந்த போலீஸார், ‘எல்லாம் கெளம்புங்க கெளம்புங்க, வீட்டைப்பாக்க போங்க’ என்று கத்தியபடி மக்களை விரட்டி அடிஹ்த்டு வருகின்றனர், காரணம் வேறென்ன? கரோனா வைரஸ்தான்.

ரியோ ஆளுநர் வில்சன் விட்ஸெல் குடியிருப்பு வாசிகளை கரோனா பரவலைத் தடுக்க நீர்நிலைகளுக்கு அருகில் செல்லாதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அடுத்த 2 வாரங்களுக்கு பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன.

கடற்கரைகளில் மக்கள் பெருமளவு கூடுவதைத் தவிர்க்க ராணுவ போலீஸையும் கூட தேவைப்பட்டால் நிறுத்துவோம் என்று விட்செல் தெரிவித்தார்.

ஒவ்வொரு நகரத்திலும் கடற்கரையில் பிரகாசமான சிகப்பு ட்ரக்குகளில் சைரன்களுடன் மெகாபோன்களுடன் போங்க போங்க என்ற குரல்கள் போர்த்துக்கீசிய மொழியில் பிரேசிலில் ஒலிக்கத்தொடங்கியுள்ளது.

ரியோவில் 31 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பதாக பதிவாகியுள்ளது. பிரேசில் முழுதும் 234 பேருக்கு கரோனா தொற்று பாதித்துள்ளது. இதுவரை யாரும் மரனமடையவில்லை.

கரோனா அச்சுறுத்தல் விழிப்புணர்வு உத்தரவுகளை பிரேசில் அரசு கலவையான வெற்றியுடன் அமல் செய்து வருகிறது. பிரேசிலில் பல அரசு அதிகாரிகளுக்கும் கோவிட்-19 பீடித்துள்ளது.

SCROLL FOR NEXT