உலகம்

இந்தியாவில் கைது செய்யப்பட்ட அமெரிக்காவின் டெனிஸீ மாகாண பாதிரியாரை விடுவிக்க அமெரிக்கா கோரிக்கை

பிடிஐ

தன்னிடம் இருந்த 40,000 டாலர்கள் தொகையை அறிவிக்காமல் மறைத்ததாக கடந்த ஆண்டு அமெரிக்காவின் டெனிஸீ மாகாணத்தைச் சேர்ந்த பிரையன் நெரென் என்ற பாதிரியார் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார், அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர் இந்திய அயலுறவு செயலர் ஹர்ஷ்வர்த்தனிடம் கோரிக்கை வைத்துள்ளனர்

செனேட்டர்களான ஜேம்ஸ் லேங்க்ஃபோர்ட், மார்ஷா பிளாக்பர்ன், மற்றும் காங்கிரஸ்மென் ஸ்காட் தெஸ்ஜார்லைஸ் மற்றும் ஜோடி ஹைஸ் ஆகியோர் இது தொடர்பாக இந்திய அயலுறவு செயலர் ஷ்ரிங்கலாவுக்கு எழுதிய கடிதத்தில் நெரென் என்ற பாதிரியார் மேற்கு வங்கத்தின் பக்தோராவில் 2019 அக்டோபரில் அன்னிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் அறிவிக்காமல் 40,000 அமெரிக்க டாலர்களுடன் இருந்ததாகக் கைது செய்யப்பட்டார். அக்டோபர் 11-ல் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கோர்ட்டில் அவர் ஆஜ்ராவதை உறுதி செய்யும் விதமாக அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. கோர்ட்டில் அவர் ஆஜராகி விசாரணைகளை முறையாக எதிர்கொண்டார்.

இந்நிலையில் நாங்கள் கவலைப்படுவது என்னவெனில் பிரையன் கெவின் நெரென் குடும்பத்தாரின் உடல் ஆரோக்கியம் குறித்தே. நெரெனின் மகள் இவருக்கு சிறப்பு உதவி தேவைப்படும் நிலையில் நிமோனியா நோய்க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகவே நெரென் எப்போது அமெரிக்கா அனுப்பப்படுவார் என்பது குறித்து எந்த ஒரு திட்டவட்ட, தெளிவான தகவலும் இல்லை.

எனவே அவரை அவரது குடும்பத்தினருடன் சேருமாறு அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பக் கோருகிறோம். அமெரிக்க-இந்திய உறவுகள் முக்கியமானது, டெல்லிக்கு சமீபத்தில் வருகை தந்த அதிபர் ட்ரம்ப்பின் இந்தியா மீதான நட்பும் இதனால் உறுதி செய்யப்பட்டுள்ளது, எனவே இதில் அதிகாரப்பூர்வ நடைமுறைகளை நாங்கள் கடைபிடிக்க விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும், நன்றி” என்று அந்தக் கடிதத்தில் கோரியுள்ளனர்.

டிசம்பர் 31, 2019-ல் இந்திய சுங்கவரித்துறை நெரென் வைத்திருக்கும் 40,000 அமெரிக்க டாலர்களை முடக்குவதாக அறிவித்தது. மேலும் ரூ.3 லட்சம் அபராதமும் விதித்தது. நெரென் தொகை அனைத்தையும் சமர்ப்பித்து அபராதத் தொகையையும் செலுத்தி விட்டார்.

என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT