உலகம்

கரோனா வைரஸ்: ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 1,000 பேர் பாதிப்பு 

செய்திப்பிரிவு

ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் 1000 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்பெயின் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், ''ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 1000 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 297 பேர் கோவிட் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தமாக ஸ்பெயினில் 8,744 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் காய்ச்சலின் தீவிரத்தைத் தொடர்ந்து ஸ்பெயினில் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உணவு, மருத்துவத் தேவைக்களுக்காக மட்டுமே மக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக கரோனா வைரஸால் அதிகமாக இத்தாலி பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

SCROLL FOR NEXT