உலகம்

பாகிஸ்தானில் கரோனா வைரஸுக்கு 94 பேர் பாதிப்பு

செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், ''பாகிஸ்தானின் தென் மாகாணமான சிந்துவில் திங்கட்கிழமை மட்டும் 41 பேருக்கு கோவிட் - 19 காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. கராச்சியில் 25 பேருக்கு கோவிட் - 19 காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது” என்று செய்தி வெளியானது.

தொடர்ந்து பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பாகிஸ்தான் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் 112 நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

SCROLL FOR NEXT