உலகம்

பொது இடத்தில் அதிகாரி தலையை வெட்டி ஐ.எஸ். தீவிரவாதிகள் தண்டனை

பிடிஐ

சிரியாவில் பொதுமக்கள் முன்னிலையில், பழங்கால பொருட்கள் துறை முன்னாள் இயக்குநரின் தலையை வெட்டி, ஐஎஸ் தீவிரவாதிகள் தண்டனையை நிறைவேற்றி உள்ளனர்.

இதுகுறித்து பழங்கால பொருட்கள் மற்றும் அருங்காட்சியக அருங்காட்சியகத்தின் இப்போதைய இயக்குநர் மாமூன் அப்துல் கரீம் கூறும்போது, “கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஐஎஸ் தீவிரவாதிகள் அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குநர் காலித் அல்-ஆசாதை கடத்திச் சென்றனர்.

இந்நிலையில், மத்திய ஹாம்ஸ் மாகாணத்தின் பால்மைரா நகரில் செவ்வாய்க்கிழமை ஆசாதின் தலையை வெட்டி கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது சடலத்தை ஒரு கம்பத்தில் கட்டி வைத்திருப்பது போன்ற புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுள்ளனர்” என்றார்.

இந்தத் தகவலை பிரிட்டனைச் சேர்ந்த சிரியாவுக்கான மனித உரிமை கண்காணிப்பு அமைப்பும் உறுதி செய்துள்ளது.

யுனேஸ்கோ உலக பாரம்பரிய பகுதியான பால்மைரா நகரை அரசு படைகளிடமிருந்து கடந்த மே 21-ம் தேதி ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT