அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு கோவிட்-19 என்ற கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் பாதிக்கப்படவில்லை என்ற முடிவு வந்ததாக மருத்துவர் ஷான் கான்லி தெரிவித்தார்.
அமெரிக்க ஊடகங்கள் பித்துப் பிடித்து அலைவதால் தான் பரிசோதனை மேற்கொண்டதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
“செய்தியாளர்கள் என்னை அடிக்கடி கரோனா டெஸ்ட் செய்து கொண்டீர்களா என்று கேட்டுக் கொண்டே இருந்தனர், எனவே டெஸ்ட் எடுத்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்தேன்.” என்றார் ட்ரம்ப்.
அதாவது கரோனா தொற்று இருப்பவருடன் ட்ரம்ப் நேரடி தொடர்பு வைத்திருந்த போதிலும் அவர் பரிசோதனைக்குத் தயாராக இல்லை என்பதற்காக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் ஒருவர் ட்ரம்பிடம் தைரியமாக, சோதனை மேற்கொள்ளாமல் ‘சுயநலவாதியா?’ நீங்கள் என்ற அளவுக்கு கேட்டு விட்டதும் குறிப்பிடத்தக்கது.
வெள்ளை மாளிகையில் கரோனா தொற்று ஸ்க்ரீனிங் நடைமுறை அறிமுகப்படுத்தியதில் பத்திரிகையாளர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.