உலகம்

பிரேசில் அதிபருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை 

செய்திப்பிரிவு

பிரேசில் அதிபர் ஜேர் போல்சினோரா கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதற்கான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தரப்பு செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.

பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனரோ கடந்த 7-ம் தேதி அமெரிக்கா சென்றார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், பால்ம் பீச் நகரில் அதிபர் டொனால்டு ட்ரம்பை அவர் சந்தித்துப் பேசினார்.
பிரேசில் அதிபருடன் அவரது தகவல் தொடர்பு செயலாளர் பாபியோ வாஜ்கார்டனும் அமெரிக்கா சென்றிருந்தார்.

பிரேசில் திரும்பிய பாபியோ வுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவரது ரத்த மாதிரியை பரிசோதனை செய்தபோது அவருக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது..

இதனைத் தொடர்ந்து ஜேர் போல்சினோராவுக்கு கோவிட் -19 காய்ச்சல் தொற்று இருக்கலாம் என்று பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து ஜேர் போல்சோனரோவின் மகன் கூறும்போது, “ அதிபர் கோவிட் காய்ச்சல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். நாங்கள் முடிவுகளுக்காக காத்து கொண்டிருக்கிறோம். இதுவரை நோய்க்கான அறிகுறிகள் அவருக்கு வெளிப்படவில்லை” என்றார்.

வெள்ளிக்கிழமை இது தொடர்பான மருத்துவ முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்று பிரேசில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

SCROLL FOR NEXT