உலகம்

மியான்மரில் ஆளும் கட்சித் தலைவர் பதவி நீக்கம்

பிடிஐ

மியான்மரில் அக்கட்சியின் தலைவர் ஷ்வே மான் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மியான்மரில் ராணுவ ஆதரவு பெற்ற ‘யூனியன் சாலிடாரிட்டி அன்ட் டெவலப்மென்ட் கட்சி’ (யுஎஸ்டிபி) ஆட்சி செய்து வருகிறது. இக்கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் ராணுவ அதிகாரியுமான தெய்ன் செய்ன் அதிபராக உள்ளார். ஷ்வே மான் கட்சியின் தலைவராக உள்ளார். இவர் நாடாளுமன்ற சபாநாயகராகவும் பதவி வகிக்கிறார்.

ராணுவ அதிகாரிகளாக இருந்த இவர்கள் இருவருமே பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவர்கள். இந்நிலையில், வரும் நவம்பர் 8-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க மான் திட்டமிட்டுள்ளார்.

ஆனால் இதை அதிபர் தெய்ன் செய்ன் விரும்பவில்லை. இந்நிலையில் மான் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT