ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ஹெராட் நகரில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
அப்பகுதிக்கு விரைந்த ஆப்கன் ராணுவத்தினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும், தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் சண்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.